Saturday 11 May 2013

ரவூப் ஹகீமின் கழுத்தை இறுக்கவுள்ள மூன்று பைல்கள்....

நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் அரசில் இருந்து வெளியேறும் பட்சத்தில் அவர் மீது இலஞ்சம் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை கைது செய்வதற்கு அரசு தயாராகி வருவதாக ஆங்கில இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசில் உள்ள அதிகாரமுள்ள புள்ளி ரவூப் ஹகீம் சம்பந்தப்பட்ட இலஞ்சம் தொடர்பான கோப்பு ஒன்றையும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான கோப்புகள் இரண்டையும் சேகரித்துள்ளதாக தெரிய வருகின்றது.

சட்டக்கல்லூரி அனுமதிக்கு அவரது இணைப்பாளர் மூலம் பத்து இலட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக தட்டச்சு செய்யப்பட்ட வாக்கு மூலங்களை உள்ளடக்கிய 9 பக்கங்கள் கொண்ட கோப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமான கோப்புகள் ஹகீம் மீது முன்னரே சாட்டப்பட்ட பாலியல் வன்புணர்வு குற்றத்துடன் தொடர்புடையவை.

இந்த கோப்புகளில் தற்கொலை செய்து கொண்ட பிரதான முறைப்பாட்டாளர் குமாரி கூரே உட்பட 16 பேரின் வாக்கு மூலங்கள் உள்ளன, இந்த குற்றச்சாட்டு சம்பந்தமான வீடியோ ஆதாரமும் அந்த அதிகாரமுள்ள புள்ளியிடம் உள்ளதாக குறித்த இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் பிரதிவாதி உயிருடன் இல்லாத நிலையில் குறித்த குற்றச்சாட்டை முன்னெடுப்பதில் சிரமங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

எது எவ்வாறு இருப்பினும் முஸ்லிம் காங்கிரஸின் உயர் குழு விரைவில் கூடி அரசுடன் தொடர்வது பற்றி ஒரு தீர்மானத்துக்கு வர உள்ளது. பெயர்குறிப்பிட விரும்பாத முஸ்லிம் காங்கிரஸ் வட்டார தகவல்களின் பிரகாரம் இந்த பயமுறுத்தல்கள் காரணாமாக ஹகீம் கட்சியின் உயர்குழு கூட்டத்தை கடந்த மூன்று மாத காலமாக தவிர்த்து வருகிறார். (via FB) (ஆதாரம்;- காத்தான்குடி.இன்போ)

Home

No comments:

Post a Comment